﻿சங்கீ..
87.
எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார். 
இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளைக் கர்த்தர் நேசிக்கிறார். 
தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள். 
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள். அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள். 
சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார். மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார். 
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். ஒவ்வொருவனும் எங்கே பிறதான் என்பதையும் தேவன் அறிகிறார். 
விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள். அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள். அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள். 
